மரணம்
*மரணம்*
மரணம் 5 வயதுக்குள் வந்தால் - கதறி அழும் பெற்றோர். - குழந்தை என்ன பாவம் செய்ததோ?
மரணம் 25 வயதுக்குள் வந்தால் - கதறி அழும் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் - அற்ப ஆயுளில் போய்விட்டானே!
மரணம் 45 வயதுக்குள் வந்தால் - கதறி அழும் பெற்றோர், குடும்பத்தார், உடன்பிறந்தோர், நண்பர்கள், உறவினர்கள் - போகும் வயதா இது?
மரணம் 60 வயதுக்குள் வந்தால் - கதறி அழும் மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், - இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம், பிள்ளைகளை கல்யாணம் செய்துவிட்டு சென்றிருக்கலாம்.
மரணம் 75 வயதுக்குள் வந்தால் - அனைத்து உறவினர்களும், குடும்பத்தார்களும் அழ மாட்டார்கள். மகள் இருந்து அழுதால், ஏன் அழுதுகொண்டு என்று தேற்றிவிடுவர் - நல்ல சாவு, கல்யாண சாவு, இருந்து துயரத்தை அனுபவிக்காது போய்விட்டார்.
மரணம் 80 வயதுக்கும் மேல் வராமல் இருந்தால் - இதெல்லாம் ஏன் இருந்து உயிரை வாங்குது. போய் தொலையலாம்.
படுக்கையில் இருந்து இழுத்துக்கொண்டிருந்தால் - பண்ணிய பாவம், நல்ல சாவே வரவில்லை.
விபத்தில் இறந்தால் - சட்டென்ற மரணத்தை எவரும் தாங்க மாட்டார்கள். எதிராளியாகவே இருந்தாலும் கொஞ்சம் கலங்குவர். இப்படி பொசுக்குன்னு போய்ட்டானே.
நோய்வாய்ப்பட்டு இறந்தால் - இப்படி நித்தமும் சாவை எதிர்பார்த்து இருக்கும் கொடுமை யாருக்கும் வரக்கூடாது, பட்டுனு உயிர் போயிட்டால் கூட பரவாயில்லை.
எப்படி பார்த்தாலும் யாருக்கும் மரணம் இனிமையாய் இல்லை. ஆனால், அதை நோக்கி தான் உலகமே நகர்கின்றது. இருப்பினும் அதற்கு தயாராகாமல் "தனக்கு இப்போதைக்கு மரணம் இல்லை" என்ற முட்டாள் தனத்தில் மக்கள் இயங்குகின்றனர். விலங்குகள், பறவைகள் இறந்த தன் இனத்தின் உடலை சுற்றி நின்று கதறும், தவிக்கும், சென்றுவிடும்.மனிதன் மட்டும் தான் அதற்கு அப்பாலும் அதனை பற்றி யோசிக்க முடியும், யோசிக்க வேண்டும். ஆனால், மனிதன் விலங்கினைவிட கேவலமாக மாறுவதால், சுற்றி நின்று கதறுவதற்கு கூட தயாராக இல்லது, சாராயம் குடித்து மட்டையாகி விடுகிறான்.
ஸ்ரீல பிரபுபாதரின் கருணையால், நமக்கு ஒளிமயமான எதிர்காலம் ஆன்மீக வானில் காத்துக்கொண்டுள்ளது. எவ்வளவு பயன்படுத்திக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது. நாமும் மேலே பார்த்த முட்டாள்களை போல மரணத்தினை இல்லை என்று நினைத்து இங்கு இன்புறுவதைவிட, நமக்கு மரணம் இல்லை, அதேசமயம், நாம் இங்கிருக்கூடியவர்கள் அல்ல என்று உணர்ந்து நமது சொந்த இடமான கோலாக விருந்தாவனத்தை நோக்கி செல்லவேண்டும். ஹரே கிருஷ்ண.
Nice
ReplyDeleteHare Krishna
ReplyDeleteHare Krishna 🙏
Delete