கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்
கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்
ப்ரக்ருதே: க்ரியமாணானி
குணை: கர்மாணி ஸர்வஷ:
அஹங்கார-விமூடாத்மா
கர்தாஹம் இதி மன்யதே (பகவத் கீதை 3.27)
பக்தர்களிடம் கிருஷ்ணர் தானே பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார், ஆனால் சாதாரண உயிர்வாழிகளின் பொறுப்பு மாயாவால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
மாயாவும் கிருஷ்ணரின் பிரதிநிதியே எவ்வாறு என்றால் நல்ல குடிமக்கள், அரசாங்கத்தினரால் நேரடியாக கவனிக்கப்படுகிறார்கள். மேலும் குற்றவாளிகள் அரசாங்கத்தால் சிறைச்சாலை (மாயாவின்) இலாக்காவின் மூலம் கவனிக்கப்படுகிறார்கள்.
சிறைச்சாலையில் அரசாங்கம், குற்றவாளிகளுக்கு செளகரியமான நிலையில் இருக்க நன்கு கவனிக்கிறது அவர்களுக்கு போதுமான உணவு கிடைக்கிறது. அவர்களுக்கு உடல் நலமில்லை என்றால் மருத்துவ சிகிச்சை அளிக்கிறார்கள், அனைத்து பராமரிப்பும் அங்கிருக்கிறது ஆனால் தண்டனையுடன்.
அதேபோல், நாம் இந்த ஜட உலகில், நிச்சயமாக பராமரிப்பு இருக்கும், ஆனால் தண்டனைக்குரிய முறையில்.
நீங்கள் கிருஷ்ண உணர்வுக்கு வந்த உடனடியாக, கிருஷ்ணர் உங்களை பாராமரிக்கிறார். அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச: (ப.கீ.18.66) நீங்கள் சரணடைந்தவுடனேயே கிருஷ்ணர் நான் உங்களை பாதுகாக்கிறேன் என்று கூறுகிறார். நான் உங்களை அனைத்திலிருந்தும் பாதுகாக்கிறேன், அனைத்துப் பாவச் செயல்களில் இருந்தும்… என்று கூறுகிறார்.
பிறவிக்குப் பின் பிறவி என்று இந்த ஜட உலகில், நம் வாழ்க்கையில் பெரும்குவியலான பாவ எதிர் நடவடிக்கைகள் உள்ளன. மேலும் நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்தவுடனேயே, உடனடியாக கிருஷ்ணர் உங்களை பாதுகாக்கிறார் மேலும் அவர் அனைத்து பாவச் செயல்களையும் எவ்வாறு சரி செய்வது என்பதையும் நிர்வகிக்கிறார்.
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச: என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
தயங்காதீர்கள் ஓ, நான் பல பாவச் செயல்களை செய்திருக்கிறேன்.. கிருஷ்ணர் எவ்வாறு என்னை காப்பாற்றுவார்? என்று நீங்கள் நினைத்தால், கிருஷ்ணர் அனைத்து சக்தியும் நிறைந்தவர் அவரால் உங்களை காப்பாற்ற முடியும்.
உங்களுடைய வேலை அவரிடம் சரணடைவது மட்டுமே, மேலும் எந்த முன்பதிவும் இல்லாமல், உங்கள் வாழ்க்கையை அவருக்கு தொண்டாற்ற ஈடுபடுங்கள் நீங்கள் காப்பாற்றபடுவீர்கள்.
Comments
Post a Comment