மோகினி ஏகாதசி
மோகினி ஏகாதசி வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு "மோகினி ஏகாதசி" என்று பெயர். இவ்விரத மஹாத்மிய கதையைக் கேட்பவரும் படிப்பவரும் ஓராயிரம் கோ ( பசு ) தானம் செய்த புண்ணியத்திற்கு இனையான புண்ணியத்தை பெறுவர். விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின் போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால்தான் இதற்கு "மோகினி ஏகாதசி" என்ற பெயர் வந்தது. பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியதுபோல், இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இறைவன் நன்மையை வாரிவழங்குவார் என்பதும் இந்த நல்ல நாளில், விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் இந்தப் பிறவியின் வினைகள் மட்டும் அல்லாமல் முந்தைய பிறவியின் வினைகளும் சேர்ந்து அழியும் என்பதும் ஐதிகம். ஏகாதசி விரதம் பல புண்ணிய பலன்களை அருள வல்லது. பாவங்கள் போக்கி, நல்லருள் தருவது. அதிலும் மோகினி ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கருத்துவேறுபாடு நீங்கி, சேர்ந்து வாழ்வார்கள் என்று ஞானநூல்கள் கூற...