Posts

அபார ஏகாதசியின் மஹத்துவம்

Image
  அபார ஏகாதசியின் மஹத்துவம் ஸ்ரீ யுதிஷ்டிர மகாராஜர்  வினவினார்:-  ஓ  ஜனார்தனா! ஆனி மாதம் தேய்பிறை காலத்தில் வரக்கூடிய ஏகாதசியினுடைய பெயர் என்ன என்பதை  கூறுங்கள்!  அதனுடைய மகத்துவம் என்ன என்பதையும் கூறுங்கள்!  தயவுசெய்து இந்த ஏகாதசியில் மற்ற அனைத்து பலங்களையும் எனக்கு கூறுங்கள்!  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதிலுரைத்தார்!  அரசனே,  உன்னுடைய கேள்வி சால சிறந்தது.  ஏனென்றால் இதனுடைய பதிலானது மொத்த   மனித சமுதாயத்திற்கும் நன்மை தரக்கூடியது.  இந்த ஏகாதசி மிகவும் சக்தி வாய்ந்ததும்  மாபெரும் பலன்களைக் கொடுக்கக் கூடியதுமாகும்.  இதனுடைய தன்மையினால் மாபெரும் பாவங்களை அழிக்க கூடிய அளவுக்கு வல்லமை பெற்றுள்ளது.  ராஜரிஷியே! அளவில்லாத பலன்களை தரக்கூடிய இந்த ஏகாதசியின் பெயர் அபார ஏகாதசி!  யாரெல்லாம் இந்த புனித நாளில் ஏகாதசி விரதத்தை பின்பற்றுகிறார்களோ, அவர்கள் மொத்த பிரபஞ்சத்திலும் புகழ்பெற்ற நபராக மா றுவார்கள்.  பசு,  கரு  மற்றும் பிராமணனைக் கொன்ற பாவம்  போன்றவற்றை ஒருவர் செய்திருந்தாலும்,  மேலும்,...

நம்பிக்கை

Image
நம்பிக்கை   ஒரு ராஜாவுக்கு  பல யானைகள் இருந்தன, ஆனால் ஒரு யானை மிகவும்  சக்திவாய்ந்த, கீழ்ப்படிதலான, விவேகமான மற்றும் சண்டை திறன்களில் திறமையானது.  பல போர்களில், போர்க்களத்தில் அனுப்பப்பட்டு ராஜாவுக்கு வெற்றியைப் பெற்று திரும்பி வரும். எனவே, ராஜாவின் மிகவும் விரும்பப்பட்ட யானையாகியது . நாட்கள் ஓடியது.யானைக்கு வயதாகியது. இப்போது யானைக்கு முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே, இப்போது மன்னர் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை, ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை இருக்கிறது. ஒரு நாள் யானை தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றது. ஆனால் அதன் கால்கள் சேற்றில் சிக்கி பின்னர் மூழ்கியது . அதிக முறை முயன்றும் சேற்றில் இருந்து அதன் காலை அகற்ற முடியவில்லை.யானை சிக்கலில் இருப்பதாக அதன் அலறல் சத்தத்திலிருந்து மக்கள் அறிந்து கொண்டனர்.யானை சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவையும் சென்றடைந்தது.  ராஜா உட்பட மக்கள் அனைவரும் யானையைச் சுற்றி கூடி அதை சேற்றிலிருந்து வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் நீண்ட நேரம் முயற்சி பலனளிக்கவில்லை. அந்த வழியே வந்த கவுதம புத்தர் ...

மோகினி ஏகாதசி

Image
 மோகினி ஏகாதசி  வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு "மோகினி ஏகாதசி" என்று பெயர்.  இவ்விரத மஹாத்மிய கதையைக் கேட்பவரும் படிப்பவரும் ஓராயிரம் கோ ( பசு ) தானம் செய்த புண்ணியத்திற்கு இனையான புண்ணியத்தை பெறுவர். விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின் போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால்தான் இதற்கு "மோகினி ஏகாதசி" என்ற பெயர் வந்தது. பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியதுபோல், இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இறைவன் நன்மையை வாரிவழங்குவார் என்பதும் இந்த நல்ல நாளில், விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் இந்தப் பிறவியின் வினைகள் மட்டும் அல்லாமல் முந்தைய பிறவியின் வினைகளும் சேர்ந்து அழியும் என்பதும் ஐதிகம். ஏகாதசி விரதம் பல புண்ணிய பலன்களை அருள வல்லது. பாவங்கள் போக்கி, நல்லருள் தருவது. அதிலும் மோகினி ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கருத்துவேறுபாடு நீங்கி, சேர்ந்து வாழ்வார்கள் என்று ஞானநூல்கள் கூற...

இரண்யகசிபு பிரபஞ்சத்தை பீதியடையச்செய்தல்

Image
இரண்யகசிபு பிரபஞ்சத்தை பீதியடையச்செய்தல்   இரண்யகசிபு கடுந்தவங்களினால் பிரம்மதேவரை மகிழ்வித்து தான் விரும்பிய வரங்களைப் பெற்றான். இந்த வரங்களைப் பெற்ற பின், கிட்டத்தட்ட முழுமையாக அரிக்கப்பட்டிருந்த அவனது உடல், முழு அழகும், தங்கத்தைப் போன்ற பளபளப்பும் கொண்ட ஓருடலாக புதுப்பித்துப்பட்டது. ஆயினும், தன் சகோதரனைக் கொன்ற பகவான் விஷ்ணுவை மறக்கமுடியாமல் தொடர்ந்து அவரிடம் பகைமை பாராட்டி வந்தான். இரண்யகசிபு பத்துத் திசைகளையும் மூவுலங்களையும் வென்று, தேவர்கள், அசுரர்கள் ஆகிய அனைத்து ஜீவராசிகளையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தான். இந்திரனின் இருப்பிடம் உட்பட எல்லா இடங்களுக்கும் அதிபதியாக மாறிய அவன், மிகவும் ஆடம்பரமாக வாழ்வை அனுபவிக்கத் துவங்கி வெறிபிடித்தவனானான். பகவான் விஷ்ணு, பிரம்மதேவர் மற்றும் சிவபெருமான் ஆகியோரைத் தவிர மற்றெல்லா தேவர்களும் அவனது கட்டுப்பாட்டிற்கு அடி பணிந்து அவனுக்கு சேவை செய்யத் துவங்கினர். ஆனால் இவ்வளவு பௌதிக சக்தியை அவன் பெற்றிருந்த போதிலும், எப்பொழுதும் வேத விதிகளை மீறுவதில் பெருமை கொண்டு திமிர் பிடித்தவனாக இருந்ததால் அவன் திருப்தியடையாதவனாகவே இருந்தான். அனைத்த...

யசோதைக்குப் பிறந்த கிருஷ்ணர்

Image
 யசோதைக்குப் பிறந்த கிருஷ்ணர் கிருஷ்ணர் மதுராவில் தேவகிக்குப் பிறந்து, பின்னர் கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்ந்தார் என்பது தெரிந்த கதை. ஆனால் கிருஷ்ணர் தேவகிக்குப் பிறந்த அதே சமயத்தில் யசோதைக்கும் பிறந்தார் என்பது தெரியாத துணுக்கு. கிருஷ்ணரை தேவகியின் உண்மையான மகன் என்றும், யசோதையின் வளர்ப்பு மகன் என்றும் பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர். சாஸ்திரங்கள் பல்வேறு இடங்களில் இதனைத் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் நமக்குத் தெரிவிப்பது யாதெனில், கிருஷ்ணர் ஒரே சமயத்தில் தேவகிக்கு மதுராவிலும் யசோதைக்கு கோகுலத்திலும் பிறந்தார் என்பதே. இது ஹரிவம்ஸ புராணத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணர் விருந்தாவனத்தில் லீலைகள் புரியும்போது, அவர் விருந்தாவன கிருஷ்ணராகத் திகழ்கிறார். மதுராவிலும் துவாரகையிலும் அவர் வாசுதேவ கிருஷ்ணராகத் திகழ்கிறார். இஃது என்ன இரண்டு கிருஷ்ணர்? இரண்டு கிருஷ்ணர் இல்லை, ஒரே கிருஷ்ணர்தான், ஆனால் பா4வம் வேறு. கிருஷ்ணர் விருந்தாவனத்தில் வெளிப்படுத்தும் பா4வமும் இதர இடங்களில் வெளிப்படுத்தும் பா4வமும் வேறுபட்டவை. கிருஷ்ண லீலையை அறிந்தவர் எவரும்...

கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்தல்

Image
கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்தல்  காளிங்கனின் கொடிய விஷத்தினால் கெட்டுப் போயிருந்த யமுனை நதியினை மீண்டும் தூய்மை பெறச் செய்வதற்காக பகவான் கிருஷ்ணர் கரையருகே நின்றிருந்த “கதம்ப” மரத்தின் மீது ஏறி யமுனை நதியினுள் குதித்தார். பிறகு அவர் ஒரு மதங் கொண்ட யானையைப் போல் யமுனை நதியில் விளையாடி மகிழ்ந்தார். கிருஷ்ணர் அத்துமீறி தனது எல்லைக்குள் நுழைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத காளிங்கன் மிகுந்த சீற்றத்துடன் பகவானிடம் வந்து அவரது மார்பில் கொத்தினான். இதனைக் கண்ட கிருஷ்ணரின் நண்பர்கள் அதிர்ச்சியினால் மூர்ச்சையடைந்து நிலத்தில் வீழ்ந்தனர். அச்சமயம் விரஜத்தில், நிலநடுக்கம், விண்மீன்கள் உதிர்தல், பல்வேறு உயிர்களின் இடதுபுறம் துடித்தல் போன்ற தீக்குறிகள் தோன்றின. விரஜத்திலிருந்தோர் “பலராமரின் துணையின்றி கிருஷ்ணன் இன்று காட்டிற்குச் சென்றிருக்கிறான், அதனால் அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லையே” என்று மனம் வருந்தினர். இவ்வாறு வருந்திய அவர்கள் கிருஷ்ணரின் காலடித் தடத்தினைப் பின்பற்றி யமுனை நதிக்கரைக்கு வந்தனர். நதியினை ஒட்டியிருந்த குளத்தில் அவர்களது உயிருக்கு உயிரான பகவான் கிருஷ்ணர் கருநாகத்தி...

பஞ்ச-தத்துவ வழிபாடு

Image
    பஞ்ச-தத்துவ வழிபாடு ----------------------------------------------------------------------------- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் ஸங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்புவார் என்றும் அவரை அவருடைய சகாக்களுடன் இணைந்து வழிபடுபவர்கள் புத்திசாலிகள் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (11.5.32) கூறுகிறது. அதன்படி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் பின்பற்றும் கௌடீய வைஷ்ணவர்கள், அவரை அவருடைய முக்கிய சகாக்களான ஸ்ரீ நித்யானந்த பிரபு, ஸ்ரீ அத்வைத பிரபு, ஸ்ரீ கதாதர பண்டிதர், ஸ்ரீவாஸ தாகூர் மற்றும் இதர பக்தர்களுடன் இணைந்து பஞ்ச-தத்துவமாக (ஐந்து தத்துவங்களாக) வழிபடுகின்றனர். இந்த பஞ்ச-தத்துவ வழிபாடு கலி யுகத்திற்கு மிகவும் உகந்ததாகும். இது குறித்து ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்திலிருந்து சில மேற்கோள்கள் இங்கே பகவத் தரிசன வாசகர்களுக்காக வழங்கப்படுகிறது. ------------------------------------------------------- அபராதங்களைப் போக்கும் பஞ்ச தத்துவ வழிபாடு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போதும் தனது முக்கிய அம்சமான ஸ்ரீ நித்யானந்த பிரபு, தனது அவதாரமான ஸ்ரீ அத்வைத பிரபு, தனது அந்தரங்க சக்தியான ஸ்ரீ கதாதர பிரபு, தனது நடுத்தர சக்தியான ...