அபார ஏகாதசியின் மஹத்துவம்

 அபார ஏகாதசியின் மஹத்துவம்




ஸ்ரீ யுதிஷ்டிர மகாராஜர்  வினவினார்:-  ஓ  ஜனார்தனா! ஆனி மாதம் தேய்பிறை காலத்தில் வரக்கூடிய ஏகாதசியினுடைய பெயர் என்ன என்பதை  கூறுங்கள்!  அதனுடைய மகத்துவம் என்ன என்பதையும் கூறுங்கள்!  தயவுசெய்து இந்த ஏகாதசியில் மற்ற அனைத்து பலங்களையும் எனக்கு கூறுங்கள்!


 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதிலுரைத்தார்!  அரசனே,  உன்னுடைய கேள்வி சால சிறந்தது.  ஏனென்றால் இதனுடைய பதிலானது மொத்த   மனித சமுதாயத்திற்கும் நன்மை தரக்கூடியது.  இந்த ஏகாதசி மிகவும் சக்தி வாய்ந்ததும்  மாபெரும் பலன்களைக் கொடுக்கக் கூடியதுமாகும்.  இதனுடைய தன்மையினால் மாபெரும் பாவங்களை அழிக்க கூடிய அளவுக்கு வல்லமை பெற்றுள்ளது.


 ராஜரிஷியே! அளவில்லாத பலன்களை தரக்கூடிய இந்த ஏகாதசியின் பெயர் அபார ஏகாதசி!  யாரெல்லாம் இந்த புனித நாளில் ஏகாதசி விரதத்தை பின்பற்றுகிறார்களோ, அவர்கள் மொத்த பிரபஞ்சத்திலும் புகழ்பெற்ற நபராக மா றுவார்கள்.  பசு,  கரு  மற்றும் பிராமணனைக் கொன்ற பாவம்  போன்றவற்றை ஒருவர் செய்திருந்தாலும்,  மேலும்,  மற்றவர்களை  இகழ்ந்து பேசுதல்,  மற்றவன் மனைவியோடு உடலுறவு கொள்ளுதல்  போன்ற பாவங்களை ஒருவன் செய்து இருந்தாலும் கூட இந்த அபார ஏகாதசியை ஒருவன் கடைபிடிக்கும் போது இந்த பாவங்களிலிருந்து முழுமையாக அவன் விடுபடுவான். 



 அரசனே!  யாரெல்லாம் பொய் சாட்சி கூறுகிறார்களோ, அவர்கள் மாபெரும் பாவிகள்!  ஒருவன் மற்றவனை பொய்யாகவோ அல்லது வஞ்சப்புகழ்ச்சியோடும்   புகழ்பவன், தராசுத் தட்டில் எடையைக் கூட்டுவதற்கு  மறைமுகமாக சில பொருட்களை வைத்து ஏமாற்றுபவன்,  தான் சார்ந்திருக்கும் வர்ணம் மற்றும் ஆசிரமம் அவற்றின் கடமைகளை செய்யாதவன்,(  அதாவது பிராமணனாகப் பிறந்து பிராமணனுடைய கடமையை செய்யாதவன்,  வேதங்களை தவறாக ஓதுபவர்) ,  சுயமாக சாஸ்திரங்களை உருவாக்குபவன்,  மற்றவர்களை ஏமாற்றுபவன்,  போலியான ஜோதிடன்,  போலியான கணக்கு பிள்ளை,  போலியான ஆயுர்வேத மருத்துவர்.  போன்ற அனைவருமே பொய்சாட்சி கூறுபவர்களுக்கு சமமானவர்களே!  இவர்கள் அனைவருமே அவர்களுடைய மரணத்திற்கு பிறகு நரக லோகத்தில் வீசி எறியப்படுவார்கள்.  ஆனால் இந்த அபார ஏகாதசியை வெறுமனே பின்பற்றுவதன் மூலமாக இப்படிப்பட்ட எல்லாவிதமான பாவங்களில் இருந்தும் ஒருவன் முழுமையாக விடுபடுகிறான். 


சத்ரிய தர்மத்திலிருந்து தவறுகின்ற வீரன்,  போர்க்களத்திலிருந்து புறமுதுகு காட்டி ஓடி விடுவான். அவர்கள்  இறந்த பிறகு  கொடூரமான நரகத்திற்குச் செல்வார்கள்.   ஓ யுதிஷ்டிர  மகாராஜனே!  அப்படிப்பட்ட இழிந்த சத்ரியன் கூட இந்த அபார ஏகாதசியை பின்பற்றினால் அந்த பாவ  விளைவுளிலிருந்து விடுபட்டு,  சுவர்க்க லோகம் அடைவான்.  ஒரு குருவிடமிருந்து ஆன்மீக கல்வியைப் பெற்ற பிறகு பிறிதொரு காலத்தில் அவருக்கு எதிராக திரும்பி அவரை இகழ்ந்து பேச ஆரம்பித்து விடுவான்.  அப்படிப்பட்ட பெயரளவிலான ஒரு சீடன் எல்லையற்ற துன்பத்தை அனுபவிப்பான்.  ஆனால் அவன் இந்த ஏகாதசியை  கடைப்பிடித்தான் என்றால் நிச்சயமாக ஆன்மீக  லோகம் போவான்.


 அரசனே!  மேலும் கேள்!  இந்த அற்புதமான ஏகாதசியை பற்றி உனக்கு நான் மேலும் எடுத்து கூறுகிறேன்!  கீழ்கண்ட செயல்பாடுகளை ஒருவன் செய்தால் என்ன பலன்கள் ஒருவனுக்கு கிடைக்குமோ அந்த எல்லா புண்ணிய கர்ம பலங்களும் இந்த ஏகாதசியை பின்பற்றுவதன் மூலமாகவே ஒருவனுக்கு கிடைக்கும்.   புஷ்கர ஷேத்திரத்தில்,  கார்த்திகை மாதத்தில்  ஒரு நாளைக்கு மூன்று முறை ஸ்நானம் செய்தால் எந்த ஒரு பலன் கிடைக்குமோ,  சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் நேரத்தில், மாசி மாதம் பிரயாக ஷேத்திரத்தில் குளிப்பதன் மூலமாக பெறப்படும் பலன்களும்,  சிவராத்திரி சமயத்தில் வாரணாசி ஷேத்திரத்தில் சிவபெருமானுக்குத் தொண்டு செய்வதால் பெறப்படுகின்ற பலனும், கயா  என்ற ஷேத்திரத்தில் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும்  சிரார்தத்தினால் வருகின்ற பலனும்,   குரு என்ற  கிரகம் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் போது, கௌதமி நதியில்  ஸ்நானம் செய்யும் பலனும்,  கேதார்நாத்  புண்ணிய ஷேத்திரத்தில் சிவபெருமானை தரிசித்த பலனும்,  சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் நேரத்தில் பத்ரிநாத்  பகவானை தரிசனம் செய்யும் பலனும்,  சூரிய கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் ஸ்நானம் செய்து,   பசு,  யானை  மற்றும் தங்கம் இவற்றை தானம் செய்த பலன்களும்,  இந்த புனித ஏகாதசியை பின்பற்றுவதன் மூலமாக ஒருவன் அடைய முடியும்.  மேலும்,  கருவுடன் இருக்கும் பசுவை,  தங்கம் மற்றும்  உழவு நிலத்தை  சேர்த்து தானமாக கொடுத்த பலனும் இந்த ஏகாதசியை ஒருவன் பின்பற்றுவதன் மூலமாக பெறமுடியும்.



 வேறுவிதமாகச் சொன்னால்,  இந்த அபார ஏகாதசி என்பது ஒரு கோடரிக்கு ஒப்பீடாக சொல்லப்படுகின்றது. அது  நன்கு போஷாக்குடன் வளர்ந்த காட்டு மரங்களுக்கு நிகரான பாவங்களை எல்லாம் வெட்டி தள்ளுகின்றது.   மேலும் எவ்வாறு ஒரு காட்டுத் தீயானது காட்டு மரங்களை சாம்பலாக மாற்றுகின்றதோ அதுபோல இது எல்லா பாவ விளைவுகளையும் சாம்பலாக மாற்றுகின்றது.  ஒருவன் செய்த  பாவங்கள் என்ற இருளை,  சூரிய ஒளி அந்த இருளை மாற்றுகின்றது, ஒரு சிங்கம் ஒரு மானை கொல்வதுபோல,  பாவங்களை அழிக்கிறது. 

 ஆகவே,  ஓ  யுதிஷ்டிரா!  யாரெல்லாம் தம்முடைய முந்தைய மற்றும் தற்போதைய பாவங்களுக்காக பயப்படுகின்றார்களோ அவர்கள் நிச்சயமாக இந்த ஏகாதசியை மிகுந்த கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்க வேண்டும்.  இந்த ஏகாதசியை கடைபிடிக்க முடியாதவர்கள் மீண்டும் இந்த ஜட உலகில் பிறவி எடுத்து ஆக வேண்டும்.  எவ்வாறு ஒரு பெரிய நீர் தேக்கத்தில்,  கோடிக்கணக்கான  நுரைகளுக்கு மத்தியில்  ஒரு சிறிய நீர்க்குமிழி போலவும், பல்வேறு ஜீவராசிகளுக்கும் மத்தியில் ஒரு சிறிய எறும்பைப் போலவும் பிறவி எடுத்தாக வேண்டும். 

ஆகவே,  ஒருவர் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த அபார ஏகாதசியை பரம்பொருளாகிய பகவான்  திரிவிக்கிரமரை  பக்தியுடன் வழிபட வேண்டும்.  யாரெல்லாம் அவ்வாறு செய்கின்றார்களோ,  அவர்கள் எல்லாவிதமான பாவ விளைவுகளிலிருந்து  விடுபட்டு பகவான் விஷ்ணுவின் லோகத்திற்கு உயர்த்த படுவார்கள்.





 ஓ பாரதா!  மொத்த மனித சமுதாயத்தின் நன்மைக்காக  இந்த புனிதமான  ஏகாதசியின் முக்கியத்துவத்தை பற்றி உமக்கு நான் எடுத்துக் கூறி இருக்கின்றேன். ஒரு  ராஜரிஷி களில் சிறந்தவனே யுதிஷ்டிரா!  இதனை யார் யாரெல்லாம் கேட்கிறார்களோ படிக்கிறார்களோ நிச்சயமாக எல்லாவிதமான பாவங்களிலிருந்தும்  விடுபடுவார்கள். ஜேஷ்டா கிருஷ்ண ஏகாதசி  அல்லது  அபார ஏகாதசியின்  மகத்துவமானது  பிரம்மாண்ட புராணத்தில் இருந்து  இவ்வாறு எடுத்துரைக்கப்பட்டது. 


 குறிப்பு:-   புஷ்கர ஷேத்திரம்  என்பது பாரத தேசத்தின் மேற்குப் பகுதியில்  பிரம்ம தேவருக்கு என்று ஒரு கோயில் இருக்கின்றது அதுதான்.


வேதங்கள் அறிவிக்கின்றது: -  மனித  வாழ்க்கை என்பது,  நீர்குமிழி களுக்கு சமானம் தான்.  நர:  புத்புத  சம:  . தண்ணீரில் பல நீர்க்குமிழிகள் உருவாகும்,  சில வினாடிகளுக்கு பிறகு அவைகள் காணாமல் போய்விடும். ஆகவே ஒருவன் தன்னுடைய வாழ்நாள் காலத்தை பரமபுருஷ பகவான்  ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவதற்கு  பயன்படுத்தவில்லை என்றால் அவனுடைய வாழ்க்கையானது  நீர்க்குமிழி போல வீணாகிவிடும்.  ஆகவே பகவான் இங்கு குறிப்பிட்டுள்ளது போல ஒவ்வொரு நபர்களும் ஹரி வாசரம் என்று சொல்லப்படும் ஏகாதசியை பின்பற்ற வேண்டும். 


Comments

Popular posts from this blog

ஏகாதசி விரதம்...!!

பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம்