ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்
ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்
அக்காலக் கட்டத்தில், சில நேரங்களில் பகவான் வெளிப்புற உணர்வை வெளிப்படுத்தி, உலக நடைமுறைக்கு ஏற்ப மக்களிடம் பேசவும் பழகவும் செய்வார்; மற்ற நேரங்களில் பகல் இரவு என்பதைக்கூட அறியாமல் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பற்றி சற்றும் அறியாத அளவிற்கு கிருஷ்ணரின் நினைவில் மூழ்கியிருப்பார்; சில சமயங்களில் இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட உணர்வில் இருந்தார். ஸ்வரூப தாமோதரர், இராமானந்த ராயர், கோவிந்தர் ஆகிய மூவரும் அவரது நிலையான தோழர்கள். இரவில் இராமானந்த ராயர் அல்லது ஸ்வரூப தாமோதரரின் கழுத்தைப் பிடித்தபடி, “ஐயோ! எனதருமை நண்பனான ஸ்ரீ கிருஷ்ணன் துன்பப் பெருங்கடலினுள் என்னை ஆழ்த்திவிட்டு மதுராவிற்குச் சென்று விட்டான். அவனின்றி எவ்வாறு என்னால் வாழ இயலும்? எனது அன்பிற்குரிய கிருஷ்ணனைக் கண்டுபிடிக்க நான் எங்கு செல்வேன்?” என்று ராதாராணியின் மனோபாவத்துடன் அவர் ஏங்குவார். ஸ்வரூப தாமோதரரும் இராமானந்த ராயரும் கிருஷ்ணரைப் பற்றிய பாடல்களைப் பாடி பகவானின் பக்தியின் உணர்ச்சிகளை அதிகரிப்பர்
Comments
Post a Comment