ஸத்வ_குணத்தின்_தேவை


*ஸத்வ_குணத்தின்_தேவை*


களங்கமற்ற ஸத்வ குணத்தில் நிலைபெற்று பகவத் பக்தியின் தொடர்பினால் தெளிவான மனதைப் பெற்றவன், எல்லா பௌதிகத் தொடர்புகளிலிருந்தும் விடுபட்டு பரம புருஷ பகவானைப் பற்றிய உண்மையான விஞ்ஞானத்தைப் பெறுகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.2.20)



பகவத்-தத்த்வ-விஜ்ஞானம் பகவானைப் பற்றிய இந்த அறிவானது, முக்த-ஸங்க, பௌதிக சங்கத்திலிருந்து விடுபட்டவனால் மட்டுமே அறிந்துகொள்ள இயலும். பௌதிக சங்கத்திலிருந்து இவ்வாறு முற்றிலும் விடுபட்ட நிலையில் இருப்பவன், ஏவம் ப்ரஸன்ன மனஸ:, எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பான். ரஜோ குணத்திலும் தமோ குணத்திலும் இருப்பவனால் மகிழ்ச்சியாக இருக்க இயலாது. ஆகவே, நாம் ஸத்வ குணத்தின் தளத்திற்கு வர வேண்டியது அவசியம்.


மனித வாழ்வு கடவுளை அறிவதற்கானது. அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸ. மிருகப் பிறவிகளில் கடவுளை அறியவியலாது. ஆனால், உணர்வு மேம்பட்டுள்ள மனிதனால் கடவுளை அறிந்துகொள்ள முடியும். கடவுளை அறிந்துகொள்வதற்கான அறிவை எவ்வாறு பெறுவது? ஸத்வ குணத்தில் நிலைபெறும்போது, கடவுளை அறிந்துகொள்ள இயலும். பறவைகளும் விலங்குகளும் தங்களுக்குத் தேவையான உணவு, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகின்றன. அவை அதற்காக எந்தவொரு தொழிலிலும் ஈடுபட்டு பொருள் ஈட்டுவதில்லை,” என்பதை ஸத்வ குணத்தில் நிலைபெறும்போது ஒருவன் காண்கிறான்.



எறும்பிலிருந்து யானை வரையுள்ள அனைத்து உயிர்வாழிகளுக்கும் குடும்பம், உறைவிடம், உணவு முதலிய தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகின்றன. இவற்றை வழங்குபவர் யார்? ஸத்வ குணத்தில் இருப்பவன் இதனைச் சிந்திக்கத் தொடங்குகிறான்.

Comments

Popular posts from this blog

அபார ஏகாதசியின் மஹத்துவம்

ஏகாதசி விரதம்...!!

பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம்