புலன் அடக்கத்தின் முக்கியத்துவம்
##புலன் அடக்கத்தின் முக்கியத்துவம்##
தூண்டில் முள்ளில் வைக்கப்பட்ட உணவை உண்ணும் ஆசையில் நாக்கின் ருசியின்ஆசை மீனை கொன்று விடுகிறது.நாக்கை வெல்ல வேண்டும்.மற்ற இந்திரியங்களையெல்லாம் (புலன்களையெல்லாம்) வெற்றி கொண்டாலும் ரஸனேந்திரியமான ருசியின் புலனான நாக்கை வெற்றி கொள்ளாவிட்டால் பயனில்லை. நாக்கின் ருசியானது பேசுவதையும் உள்ளடக்கிது.எதை வேண்டுமானாலும் உண்பது தீமை விளைவிப்பது போல எதை வேண்டுமானாலும் பேசுவதும் தீமை விளைவிக்கும்.நுணலும் ( தவளை) தன் வாயால் கெடும் என்பது பழமொழி.தவளை தான் இருக்கும் இடத்தை தன் வாயால் கத்தி பாம்புக்கு தன்னையே இரையாக்கிக் கொள்வது போலாகும்.அதனால் நாம் நம்முடைய நாக்கையும் வாயையயும் பகவான் கிருஷ்ணனின் நாமம் சொல்ல பழக்கப் படுத்தி தினமும் வழக்கமாக கடமையாக சொல்லி வரவேண்டும்.ஸ்ரீமாதவனின் நாமம் சொன்னால் மனத்தின் மாசுக்கள் நீங்கி தூய்மையடைவோம்.🙇🏻♀️🙏🏼
Comments
Post a Comment