ஏகாதசி தினத்தில் தானியங்களால்லான விஷ்ணு பிரசாதத்தை உண்ணலாமா?



ஏகாதசி தினத்தில் தானியங்களால்லான விஷ்ணு பிரசாதத்தை உண்ணலாமா? 



ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியின் பக்தி-ஸந்தர்ப, நூலில், ஸ்கந்த, புராணத்திலிருந்து ஒரு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஏகாதசியன்று தானியங்களை உண்பவன் தனது தாய், தந்தை, சகோதர மற்றும் ஆன்மீக குருவைக் கொலை செய்தவனாகிறான் என்றும், அவன் வைகுண்ட லோகத்திற்கு ஏற்றம் பெற்றால்கூட வீழ்ச்சியடைகிறான் என்றும் அங்கே எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏகாதசியன்று தானியங்கள் பருப்புகள் உட்பட அனைத்து தினசரி உணவும் விஷ்ணுவிற்குச் சமைக்கப்படுகின்றன, ஆனால் அந்த விஷ்ணு பிரசாதத்தினைக்கூட ஏகாதசியன்று ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று வைஷ்ணவர் அறிவுறுத்தப்படுகிறார். பகவான் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படாத எந்த உணவுப் பொருளையும் வைஷ்ணவன் ஏற்பதில்லை என்று கூறப்படுகிறது, ஆனால் ஏகாதசியன்று விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மஹா பிரசாதத்தினைக்கூட வைஷ்ணவன் தீண்டக் கூடாது; அத்தகு பிரசாதம் அப்படியே வைக்கப்பட்டு மறுநாள் உண்ணப்படலாம். பகவான் விஷ்ணுவிற்கு நைவேத்தியம் செய்யப்பட்டதாக இருந்தாலும் ஏகாதசியன்று எந்த வகையான தானியத்தையும் ஏற்பதிலிருந்து ஒருவன் கண்டிப்பாகத் தடை செய்யப்படுகிறான்.


ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் 1.15.9 / பொருளுரை / வழங்கியவர் - ஶ்ரீல பிரபுபாதர்

ஹரே கிருஷ்ண!




Comments

Popular posts from this blog

அபார ஏகாதசியின் மஹத்துவம்

ஏகாதசி விரதம்...!!

பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம்