பொறுமை

 ** பொறுமை **



கிருஷ்ண உணர்வில் ஒருவர் பொறுமையற்றவராக இருக்கக் கூடாது. உண்மையில், இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் பிறருதவி இல்லாமல் தனியே ஆரம்பிக்கப்பட்டதாகும். மேலும் துவக்கத்தில் இதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் நமது பக்தித் தொண்டை நாம் பொறுமையுடன் தொடர்ந்து செய்தால், இந்த இயக்கத்தின் முக்கியத்துவத்தை மக்கள் படிப்படியாக அறியத் துவங்கினர். மேலும் இப்போது அவர்கள் விருப்பத்துடன் பங்கு பெறுகின்றனர். பக்தித் தொண்டை நிறைவேற்றுவதில் பொறுமையை இழந்து விடக் கூடாது. ஆனால் ஆன்மீக குருவிடமிருந்து உபதேசங்களை ஏற்று, அவற்றை குரு, கிருஷ்ணரின் கருணையை நம்பி, பொறுமையுடன் நிறைவேற்ற வேண்டும். கிருஷ்ண உணர்வுச் செயல்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு பொறுமை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய இரண்டும் தேவைப்படுகின்றன. புதிதாக திருமணமணான பெண் ஒருத்தி இயல்பாகவே தனது கணவனிடம் இருந்து குழந்தையை எதிர்பார்க்கிறாள். ஆனால் திருமணமான உடனேயே அதை அவள் எதிர்பாபர்க்க முடியாது. திருமணமான உடனேயே குழந்தை பெறும் முயற்சியில் அவள் ஈடுபடலாம் என்பது சரிதான். ஆனால் அவள் தனது கணவனிடம் சரணடைந்து, குழந்தை விருத்தியடைந்து, உரிய காலத்தில் பிறக்கும் என்பதில் அவள் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். அதைப் போலவே பக்தியில் சரணாகதி என்பது ஒருவன் தன்னம்பிக்கை கொண்டவனாக மாற வேண்டும் என்பதைக் குறிப்பதாகும். பக்தன் நினைக்கிறான், “அவஸ்ய ரக்ஷிபே க்ருஷ்ண: கிருஷ்ணர் நிச்சயமாக என்னைக் காப்பாற்றி, பக்தித் தொண்டை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு எனக்கு உதவுவார்”. இதுவே தன்னம்பிக்கை என்று அழைக்கப்படுகிறது.

Comments

Post a Comment

Popular posts from this blog

அபார ஏகாதசியின் மஹத்துவம்

ஏகாதசி விரதம்...!!

பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம்