ராமாயணத்தில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய பாடங்கள்.

 இன்று ஸ்ரீ ராம நவமி



ராமாயணத்தில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய பாடங்கள்.

1. மனுநீதி சாஸ்திரத்தின்படி எங்கெங்கெல்லாம் ஆட்சி நடக்கின்றதோ, அங்கெல்லாம்  எல்லா வளமும் நிறைந்து இருக்கும்.



 உதாரணம்:- அயோத்தியாவை தலை நகராகக் கொண்டிருந்தது மிதிலை  நகரம். அங்கு தசரதன் தர்ம நெறியில் ஆட்சி நடத்தியதன் காரணமாக இங்கே எந்த மக்களும் வறுமையில் இல்லை. ஆதலால் அந்த ஊரில் திருடர்கள் என்று யாருமே இல்லை. அந்த மாகாணத்தில் யாரும் நோயினால் பாதிக்கப் படவில்லை.  எதிரி நாடுகளால் எத்தகைய அச்சமும் கிடையாது. மக்கள் யாருக்கும் அகால மரணம் ஏற்பட வில்லை. அனைத்து விதமான  மக்களும் தங்களை ஒருவரோடு ஒருவர் சகோதரர்களைப் போல பழகினார்கள். உடல் ஊனமுற்றோர் என்று யாரும் இருக்கவில்லை. மாதம் மூன்று முறை மழை பெய்தது. அதன் காரணமாக தானியங்கள் அனைத்தும் அளவுக்கு அதிகமாக விளைந்திருந்தது. விலை உயர்ந்த உலோகங்களான தங்கம் வெள்ளி  போன்றவை மக்களால் சாமான்ய பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தப்பட்டன.

நதிகள்,  குளங்கள் மற்றும் ஏரிகள் இருந்த அனைத்தும் முழுமையாக நிரம்பி இருந்தன.  மக்கள் தங்களுக்குள் இந்த விதமான தீய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை மாறாக, அன்பு, நன்னடத்தை, விட்டுக்கொடுத்தல், தானம் போன்ற அற பழைக்கங்களை வளர்த்து கொண்டனர்.

2. கூடாநட்பு குடும்பத்தை கெடுக்கும்!


கைகேயி தன்னுடைய சொந்த மகனாகிய பரதனை விட ராமரின் மீது அதிகமாக அன்பு கொண்டிருந்தாள். அந்த அளவுக்கு பண்பு நிறைந்தவள். அப்படி இருந்தும் ஒரேயொரு சுயநலனோடு பொறாமையை தூண்டும்  ஒரு தோழியை அருகில் வைத்திருந்ததால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் தன் நாட்டின் மக்களுக்கும் தீமையையே கொண்டுவந்தாள்.

3. தந்தையால் கொடுக்கப்பட்ட வாக்கிற்காக தன் சுக போகங்களை எல்லாம் துறப்பவனே உண்மையான மகன்!


உதாரணம் :- தன் தந்தையின் வாக்கை காப்பாற்றுவதற்காக ராஜ சுகபோகங்கள் அனைத்தையும் ஒரு சேர துறந்தவர் பகவான் ராமர்.


4. கணவனுக்கு கிடைக்காத சுகபோகம் எனக்கும் வேண்டாம் என்று சொல்பவளே உண்மையான மனைவி.


உதாரணம் :- பகவான் ஸ்ரீ ராமரை பின்பற்றி சீதையும் துறவுக் கோலம் பூண்டார்.



5. தர்மத்தின் வழி நடக்கும் ஒரு மூத்த சகோதரனுக்காக தன்னுடைய அனைத்தையும் இழக்கத் தயாராக இருப்பதும் உண்மையான தம்பிக்கு அடையாளம்.

 உதாரணம்:- லக்ஷ்மனன்  ராமரோடு சேர்ந்து துறவு வாழ்க்கை வாழ்ந்தார். மற்றும் பரதன் சத்ருக்னன் ராஜ்ஜியத்திற்குள் இருந்துகொண்டே துறவுவாழ்க்கை வாழ்ந்தனர்.

6. பகவானின் பாத lத்தை தவிர வேறு எதன் மீதாவது கவர்ச்சி கொண்டால், நிச்சயம் நாம் நம்மை இழந்து விடுவோம். 

உதாரணம் :-  சீதை தங்கமானின் மீது கவர்ச்சி கொண்டு அதை கொண்டுவர ராமரிடம் கூறியதால், ராமர் அதைக் கொண்டுவர சென்றுவிட்டார்.  பிறகு ராவணன் சீதையை கவர்ந்து சென்று விட்டான். 

7. சாது வேடம் போட்டவனெல்லாம் சாது கிடையாது. உண்மையான சாது தர்மம் அறிந்தவன். 

  ராவணன் ஒரு சாதுவின் வேடத்தை ஏற்றுக் கொண்டு சீதையிடம் வந்து பிச்சை கேட்டான். ஆனால் அவனுடைய பேச்சில் சாதுவினுடைய தன்மை கிடையாது.  ஆகவே அத்தகையவனுடைய பேச்சை கேட்டு மதிக்க வேண்டிய அவசியம் கிடையாது. மாறாக லக்ஷ்மணன் ஒரு மகாத்மா என்பதால்  அவர் பேச்சைக் கேட்டு நடப்பது சிறந்ததாகும். லட்சுமணன் பேச்சை மதிக்காமல் நடந்ததால் சீதை கவரப்பட்டார்.

8. ஒரு பெண்ணை காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு வீரன் நிச்சயம் உயர்ந்த லோகங்களை  அடைகிறான். 


உதாரணம் :-

 ராவணன் சீதையை கடத்திச் செல்ல முயற்சித்த போது, அவளைக் காப்பாற்றுவதற்காக, ஜடாயு தன்னுடைய உயிரின் இறுதி மூச்சு வரை போராடி வீர மரணம் அடைந்தார். பிறகு அவர் வைகுண்ட லோகம் புகுந்தார்.

9. தேவர்களால் கொடுக்கப்படும் வரங்களை ஒருவன் மீறக் கூடாது.


உதாரணம் :- வாலி பிரம்ம தேவரிடம் இருந்து வரம் பெற்றிருந்தார். அந்த வரத்தின் படி, வாலியை நேருக்கு நேர் நின்று யாரும் யுத்தம் செய்து கொல்லமுடியாது. அந்த வரத்தை மதிக்கும் விதத்தில் ராமர் மறைந்து நின்றுதாக்கினார். இவ்வாறாக பிரம்மதேவரின் வரம் காக்கப்பட்டது.

10. உண்மையான சாத்துக்களிடம் வம்பிழுத்தால் தான் பெற்ற வரம் அனைத்தும் மறந்து போகும். பிறகு மற்றொரு சாதுவிற்கு உதவிசெய்ய முயலும்போது மட்டுமே அந்த வரங்கள் நினைவிற்கு வரும்.


உதாரணம் :- ஹனுமார் சிறிய வயதில் பல வரங்களை பெற்றிருந்தார். அந்த வரங்களை பயன்படுத்தி ரிஷிகளை பல்வேறு விதங்களில் தொந்தரவு செய்தார். அதனால் ரிஷிகள் கோபமடைந்து அவர பெற்ற சக்திகள் அனைத்தும் மறந்து போகும்படி சாபமிட்டனர். 

 பல ஆண்டுகள் கழித்து, ராமருக்கு உதவி செய்ய முன்வந்த போது, ஜாம்பவான் என்ற மற்றொரு நபரால் அவர்தம் சக்திகள் அனைத்தும் மீண்டும் நினைவூட்டப்பட்டு சக்திகள் திரும்பபெற்று ராமரில் சேவையில் ஈடுபடுத்தினார்.

11. மற்றொருவனுடைய மனைவியின்மீது மோகம் கொல்பவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களயும் அழிக்கிறான். 


உதாரணம் :- ராவணன் கொண்ட மோகத்தால் பெரும்பாலான இலங்கைவாசிகளும் அழிவை சத்தித்தனர்.


12.  தீயவர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் ராம பக்தி  ஒருவனை நல்லவனாகவே வைத்திருக்கும்.


உதாரணம் :- விபீஷனர் அசுரனான ராவணன் மாளிகையில் வாழ்ந்தாலும் தொடர்ந்து ராம நாமத்தை கூறியதால் தர்மவனாகவே இருந்தார். பிறகு ராமரின்  சேவகராக மாறினார்.


13. ஒருவனுடைய சக்தியின் மீது நம்பிக்கை கொள்வதைவிட தர்மத்தின்மீது நம்பிக்கை கொள்வதே சிறந்த வெற்றியை கொடுக்கும்.

உதாரணம் :- ராவணனின் சகாக்கள் தன் சக்தியை நம்பினார்கள். ஆனால் தர்மத்தை கைவிட்டுவிட்டனர்.

ராமரின் சகாக்களோ சக்தியை பெற்றிருந்தாலும் அந்த சக்தியை விட தர்மத்தையே துணையாக நம்பியிருந்தனர். ஆதலால் வெற்றியடைந்தனர். வாழ்த்துக்கள்.


உண்மையான தர்மம் பகவானால் கொடுக்கப் படுவது. மனிதர்களால் உருவாக்குவது கிடையாது. பகவத் கீதை,  ஸ்ரீமத் பாகவதம், ராமாயணம் போன்றவை தர்ம கிரந்தங்களாகும். அதனை தினமும் படித்து அதன்படி வாழ்வோமாக!


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.


 தொகுப்பு :- ஜெகன்னாத தாஸ்.

Comments

Popular posts from this blog

அபார ஏகாதசியின் மஹத்துவம்

ஏகாதசி விரதம்...!!

பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம்