உயர்ந்த பக்குவ நிலை
//* உயர்ந்த பக்குவ நிலை *//
ஜடவுடல் இருக்கும்வரை, உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல், தற்காத்துக் கொள்ளுதல் எனும் உடலின் உந்துதல்களை சந்தித்துதான் ஆக வேண்டும். ஆனால் தூய பக்தி யோகத்தில் இருப்பவன் (கிருஷ்ண உணவினன்) உடலின் உந்துதல்களைச் சந்திக்கும்போது, அவன் தனது புலன்களைத் தூண்டுவதில்லை. மாறாக, வாழ்க்கைக்கான அத்தியாவசியத் தேவையை மட்டும் ஏற்றுக் கொண்டு, மோசமான நிலையையும் சாதமாக்கிக் கொண்டு, கிருஷ்ண உணர்வில் திவ்யமான ஆனந்தத்தை அனுபவிக்கின்றான். அவ்வப்போது நடக்கும் விபத்துகள், வியாதிகள், பஞ்சம், மிக நெருங்கிய உறவினரது மரணம் ஆகியவற்றை அவன் கண்டு கொள்வதில்லை, ஆனால் பக்தி யோகத்தின் (கிருஷ்ண உணர்வின்) கடமைகளில் அவன் எப்போதும் கவனத்துடன் உள்ளான். விபத்துகள் கடமையிலிருந்து அவனைப் பிறழச் செய்வதில்லை. பகவத் கீதையில் (2.14) கூறியுள்ளபடி, ஆகமாபாயினோ (அ)நித்யஸ் தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத. அவ்வப்போது வரும் இத்தகு நிகழ்ச்சிகளை அவன் பொறுத்துக் கொள்கிறான்; ஏனெனில், இவை வந்து போகக் கூடியவை என்றும், தனது கடமைகளை பாதிக்காதவை என்றும், அவன் அறிவான். இவ்விதமாக அவன் யோகப் பயிற்சியில் உயர்ந்த பக்குவ நிலையை அடைகிறான்.
Comments
Post a Comment