நிலையான மகிழ்ச்சி
** நிலையான மகிழ்ச்சி **
இந்த ஜட உலகிலுள்ள ஒவ்வொருவரும் கஷ்டமான சூழ்நிலைகளால் துன்புறுகின்றனர். ஆனால் இவ்வுலகம் இன்பம் நிறைந்தது என்று ஸ்ரீல பிரபோதனந்த சரஸ்வதி கூறுகிறார். இது எவ்வாறு சாத்தியமாகும்? இதற்கு அவர், யத்-காருண்ய-கடாக்ஷ-வைபவவதாம் தம் கௌரம் ஏவ ஸ்தும: என்று பதிலளிக்கிறார். அதாவது, ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் காரணமற்ற கருணையினால் தான் இந்த ஜட உலக துன்பத்தையும் மகிழ்ச்சியாக ஒரு பக்தன் ஏற்றுக் கொள்கிறான். ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுவதன் மூலமாக ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஒருபோதுமே துன்புற்றதே இல்லை, மாறாக மகிழ்ச்சியுடையவராகவே இருந்திருக்கிறார் என்பது அவரது சொந்த வாழ்விலிருந்து தெளிவாகிறது. ஒருவன் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பற்றி, எப்பொழுதும் ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற மகா மந்திரத்தைப் பாட வேண்டும். அப்பொழுது இந்த இருமை உலகின் துன்பங்களை அவன் ஒருபோதும் உணரமாட்டான். பகவானின் புனித நாமத்தைப் பாடுபவன் வாழ்வின் எந்த நிலையிலும் மகிழ்ச்சியாகவே இருப்பான்.
Comments
Post a Comment