பிறப்பற்ற வாழ்வை அடைதல்
பிறப்பற்ற வாழ்வை அடைதல்
ஆன்மீக உலகம் உள்ளது என்பதையும், அதுவே பகவானின் ராஜ்ஜியம் என்பதையும் நீங்கள் நம்ப வேண்டும். யம் ப்ராப்ய ந நிவர்தந்தே, அந்த ஆன்மீக லோகத்தை அடைய முடிந்தால், அதன் பலன் (ந நிவர்தந்தே) மீண்டும் ஓர் உடலை ஒருபோதும் ஏற்க வேண்டியதில்லை. இங்கே உங்களது வாழ்வின் உண்மையான நிலையை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பை கிருஷ்ணர் வழங்குகிறார்.
அந்த ஆன்மீக லோகத்தை எவ்வாறேனும் உங்களால் அணுக முடிந்தால், அதன் பின்னர் இந்த துன்பம் மிகுந்த பூமிக்குத் திரும்ப வேண்டியதில்லை. சந்திர லோகத்திற்குச் சென்று மகிழ்ச்சியாக வசிக்கலாம் என்று நாம் தற்போது முயன்று கொண்டுள்ளோம். சந்திரனுக்குச் செல்ல முடிந்தால், மகிழ்ச்சி அடைவோம் என்று எண்ணிக் கொண்டுள்ளோம், ஆனால் அது பயனற்றது. ஆப்ரஹ்ம-புவனால் லோகா: புனர் ஆவர்தினோ ’ர்ஜுன. பௌதிக உலகிலுள்ள எந்த கிரகத்திற்குச் சென்றாலும், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய துன்பங்களைத் தவிர்க்க இயலாது. ஆகவே, இந்த ஜடவுலகத்தின் எந்தவோர் இடத்தின் மீதும் விருப்பம்கொள்ளக் கூடாது.
கிருஷ்ணர் நமக்கு மதிப்புமிக்க விஷயங்களை வழங்குகிறார். கிருஷ்ணரின் உன்னத இருப்பிடத்தை அடைந்தால், இந்த முட்டாள்தனமான ஜடவுலகிற்கு மீண்டும் திரும்பி வரத் தேவையில்லை. பகவத் கீதையிலிருந்து நீங்கள் பெறும் தகவல் இதுவே. அந்த உன்னத இருப்பிடத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? சில தத்துவ அறிஞர்கள் அந்த ஆன்மீக வெளி அருவமானதாகவும் வெற்றிடமானதாகவும் இருத்தல் வேண்டும் என்று நினைக்கின்றனர். அருவவாதிகளும் பௌத்தர்களும் ஆன்மீக வெளியில் வெற்றிடம்தான் உள்ளது என்று நம்புகின்றனர். ஆனால் பகவத் கீதை இதுபோல உங்களை ஏமாற்றுவதில்லை.
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
தினமும் உச்சரிப்பீர்!
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராமா ராமா ஹரேஹரே
இது கலியுகத்திற்க்கான மந்திரம்.
தினமும் சொல்லுங்கள், ஆனந்தமாக இருங்கள்.
Comments
Post a Comment