மகிழ்ச்சி

 


 மகிழ்ச்சி



முழுமுதற் கடவுள் புருஷோத்தமர் அதாவது எல்லா உயிர்களிலும் மிகச் சிறந்தவர் என்று அறியப்படுகிறார். எல்லா உயிர்களைப் போலவே இவரும் இருப்பார். எனினும் இவரே அவைகளில் எல்லாம் மேம்பட்டவராகவும் தலைவராகவும் விளங்குகிறார். இவரே நித்தியமானவற்றுள் எல்லாம் உயர்ந்தவராகவும், உயிர்களுக்கெல்லாம் சிறந்தவராகவும், மற்றும் முழுதுமானப் பூரணர் ஆகவும் விளங்குகின்றார். மற்ற உயிர்களின் செயல்களில் குறுக்கிட்டு இவர் அடைகின்ற பலன் ஏதும் இல்லை எனினும் அவர் நெறிமுறைப்படுத்திக் காக்கின்றவர். ஆதலினால் அவைகளை உயர்நிலைக்கு ஏற்றி அவை மகிழ்ச்சியுறமாறுச் செய்யும் உரிமை அவருக்கு இருக்கிறது. ஒரு தந்தை கூட தன் மக்கள் எல்லோரும் தன் விருப்பத்திற்கேற்றவாறு நடந்து மகிழ்ச்சியடைவதையே விரும்புகிறான். அது போல் கடவுள் அல்லது முழுமுதற் கடவுள் அல்லது கிருஷ்ணர் உயிர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனவா என்று பார்க்கும் உரிமை படைத்தவராக இருக்கின்றார். இப்பௌதீக உலகில் மகிழ்ச்சியுடனிருப்பது நடவாத காரியம். தந்தையும் தனயர்களும் நித்தியமானவர்கள், ஆனால் ஓர் உயிர் அறிவு, ஆனந்தம் என்னும் நித்திய வாழ்வு நிலைக்கு உயராவிட்டால் அங்கு மகிழ்ச்சி என்ற கேள்விக்கே இடமில்லை. உயிர்களில் சிறந்தவராக புருஷோத்தமர் விளங்கினாலும் இச்சாதாரணமான உயிர்களினிடத்திலிருந்து அவர் அடைகின்ற பலன்கள் ஏதுமில்லை. ஆனாலும் அவ்வுயிர்களின் பாதை சரியானதா அல்லது தவறானதா என்று பிரித்துப் பார்க்கின்ற உரிமை அவருக்கு இருக்கின்றது. இதில் சரியான பாதை என்பது நாம் முன்பே விவாதித்த (ஸ்வநுஷ்டிதஸ்ய தர்மஸ்ய ஸம்ஸித்திர் ஹரிதோஷணம்) முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவது ஆகும். உயிர்கள் பல்வேறு விதமான கடமைகளில் பூட்டப்பட்டிருந்தாலும் ஒருவன் தன் கடமையில் நிறைவை விரும்புவானேயானால் அவன் முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்தியே ஆக வேண்டும். இவ்வாறு அவருக்கு மகிழ்ச்சியளிப்பவன் வாழ்க்கையில் மேல் நிலைக்கும் மகிழ்ச்சியளிக்காதவன் கீழ் நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள்.

Comments

Popular posts from this blog

அபார ஏகாதசியின் மஹத்துவம்

ஏகாதசி விரதம்...!!

பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம்