அபார ஏகாதசியின் மஹத்துவம்
அபார ஏகாதசியின் மஹத்துவம் ஸ்ரீ யுதிஷ்டிர மகாராஜர் வினவினார்:- ஓ ஜனார்தனா! ஆனி மாதம் தேய்பிறை காலத்தில் வரக்கூடிய ஏகாதசியினுடைய பெயர் என்ன என்பதை கூறுங்கள்! அதனுடைய மகத்துவம் என்ன என்பதையும் கூறுங்கள்! தயவுசெய்து இந்த ஏகாதசியில் மற்ற அனைத்து பலங்களையும் எனக்கு கூறுங்கள்! பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பதிலுரைத்தார்! அரசனே, உன்னுடைய கேள்வி சால சிறந்தது. ஏனென்றால் இதனுடைய பதிலானது மொத்த மனித சமுதாயத்திற்கும் நன்மை தரக்கூடியது. இந்த ஏகாதசி மிகவும் சக்தி வாய்ந்ததும் மாபெரும் பலன்களைக் கொடுக்கக் கூடியதுமாகும். இதனுடைய தன்மையினால் மாபெரும் பாவங்களை அழிக்க கூடிய அளவுக்கு வல்லமை பெற்றுள்ளது. ராஜரிஷியே! அளவில்லாத பலன்களை தரக்கூடிய இந்த ஏகாதசியின் பெயர் அபார ஏகாதசி! யாரெல்லாம் இந்த புனித நாளில் ஏகாதசி விரதத்தை பின்பற்றுகிறார்களோ, அவர்கள் மொத்த பிரபஞ்சத்திலும் புகழ்பெற்ற நபராக மா றுவார்கள். பசு, கரு மற்றும் பிராமணனைக் கொன்ற பாவம் போன்றவற்றை ஒருவர் செய்திருந்தாலும், மேலும்,...
Comments
Post a Comment