Posts

Showing posts from March, 2021

புலன் அடக்கத்தின் முக்கியத்துவம்

Image
 ##புலன் அடக்கத்தின் முக்கியத்துவம்## தூண்டில் முள்ளில் வைக்கப்பட்ட உணவை உண்ணும் ஆசையில் நாக்கின் ருசியின்ஆசை மீனை கொன்று விடுகிறது.நாக்கை வெல்ல வேண்டும்.மற்ற இந்திரியங்களையெல்லாம் (புலன்களையெல்லாம்) வெற்றி கொண்டாலும் ரஸனேந்திரியமான ருசியின் புலனான நாக்கை வெற்றி கொள்ளாவிட்டால் பயனில்லை. நாக்கின் ருசியானது பேசுவதையும் உள்ளடக்கிது.எதை வேண்டுமானாலும் உண்பது தீமை விளைவிப்பது போல எதை வேண்டுமானாலும் பேசுவதும் தீமை விளைவிக்கும்.நுணலும் ( தவளை) தன் வாயால் கெடும் என்பது பழமொழி.தவளை தான் இருக்கும் இடத்தை தன் வாயால் கத்தி பாம்புக்கு தன்னையே இரையாக்கிக் கொள்வது போலாகும்.அதனால் நாம் நம்முடைய நாக்கையும் வாயையயும் பகவான் கிருஷ்ணனின் நாமம் சொல்ல பழக்கப் படுத்தி தினமும் வழக்கமாக கடமையாக சொல்லி வரவேண்டும்.ஸ்ரீமாதவனின் நாமம் சொன்னால் மனத்தின் மாசுக்கள் நீங்கி தூய்மையடைவோம்.🙇🏻‍♀️🙏🏼

கிருஷ்ண பிரசாதத்தின் உயர்ந்த சுவை

Image
  கிருஷ்ண பிரசாதத்தின் உயர்ந்த சுவை: மேற்கூறிய நிலைகளைத் தாண்டி மேலும் உயர்வு பெற்ற பக்தர்கள், கிருஷ்ண பிரசாதத்தின் உண்மையான சுவையினை உணர்ந்து, வேறு எந்தச் சுவையிலும் நாட்டமின்றி வாழ்கின்றனர். நாவின் சுவைக்காக ஏங்குவோரால் கிருஷ்ணரின் மீதான சுவையைப் பெற முடியாது. இதனை உணர்ந்தவர்கள் நாவிற்காக அங்குமிங்கும் அலைவதில்லை. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அறிவுறுத்துகிறார்: ஜிஹ்வார லாலஸே ஜேஇ இதி-உதி தாய ஷிஷ்னோதர-பராயண க்ரிஷ்ண நஹி பாய நாவிற்கு அடிமையாகி அதனை திருப்தி செய்வதற்காக இங்குமங்கும் செல்பவன், தனது வயிறு மற்றும் பாலுறுப்பின் தொண்டில் ஈடுபட்டுள்ளான், அவனால் கிருஷ்ணரைப் பெற முடியாது.” (சைதன்ய சரிதாம்ருதம், அந்திய லீலை 6.227) நாவிற்கு அடிமையாக வாழும் நிலையிலிருந்து உயர்வு பெற்று, கிருஷ்ண பிரசாதத்திற்கு அடிமையாக வாழும் நிலையை அடைந்தவர்கள், அந்த பிரசாதத்தைத் தவிர எதையும் சீண்டக்கூட மாட்டார்கள். கிருஷ்ண பிரசாதம் பகவானின் அதரங்களினால் (உதடுகளால்) சுவைக்கப்பட்டது என்பதால், அது மிகவும் சுவையுடையதாக உள்ளது. கிருஷ்ணருடைய அதரங்களின் சுவையை அந்த கிருஷ்ண பிரசாதத்தை உண்பவர்கள் நிச்சயம் சுவைக்கின்றனர். பல நேர...

ஸத்வ_குணத்தின்_தேவை

Image
*ஸத்வ_குணத்தின்_தேவை* களங்கமற்ற ஸத்வ குணத்தில் நிலைபெற்று பகவத் பக்தியின் தொடர்பினால் தெளிவான மனதைப் பெற்றவன், எல்லா பௌதிகத் தொடர்புகளிலிருந்தும் விடுபட்டு பரம புருஷ பகவானைப் பற்றிய உண்மையான விஞ்ஞானத்தைப் பெறுகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.2.20) பகவத்-தத்த்வ-விஜ்ஞானம் பகவானைப் பற்றிய இந்த அறிவானது, முக்த-ஸங்க, பௌதிக சங்கத்திலிருந்து விடுபட்டவனால் மட்டுமே அறிந்துகொள்ள இயலும். பௌதிக சங்கத்திலிருந்து இவ்வாறு முற்றிலும் விடுபட்ட நிலையில் இருப்பவன், ஏவம் ப்ரஸன்ன மனஸ:, எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பான். ரஜோ குணத்திலும் தமோ குணத்திலும் இருப்பவனால் மகிழ்ச்சியாக இருக்க இயலாது. ஆகவே, நாம் ஸத்வ குணத்தின் தளத்திற்கு வர வேண்டியது அவசியம். மனித வாழ்வு கடவுளை அறிவதற்கானது. அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸ. மிருகப் பிறவிகளில் கடவுளை அறியவியலாது. ஆனால், உணர்வு மேம்பட்டுள்ள மனிதனால் கடவுளை அறிந்துகொள்ள முடியும். கடவுளை அறிந்துகொள்வதற்கான அறிவை எவ்வாறு பெறுவது? ஸத்வ குணத்தில் நிலைபெறும்போது, கடவுளை அறிந்துகொள்ள இயலும். பறவைகளும் விலங்குகளும் தங்களுக்குத் தேவையான உணவு, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகின்றன. அவை அதற்காக எந்...

மீனவனின் வலையில் மஹாபிரபு

Image
*மீனவனின் வலையில் மஹாபிரபு*  மீனவன் பதிலளித்தான், “நேற்றிரவு எனது வலையில் நான் ஒரு விசித்திரமான பேயினைப் பிடித்தேன். அதன் அங்கங்கள் உடலிலிருந்து பிரிக்கப்பட்டிருந்தன. இரவில் மீன்பிடிக்கச் செல்லும்போது பேய்களிடமிருந்து என்னைப் பாதுகாக்க நான் நரசிம்மதேவரின் நாமத்தை உச்சரிப்பது வழக்கம். ஆனால் இம்முறை நரசிம்மதேவரின் நாமத்தை நான் அதிகமாக உச்சரித்தபோது, இப்பேய் மிகவும் சக்தியுடையதாக மாறியது எனக்கு விசித்திரமாக இருந்தது.” முழு சூழ்நிலையை உணர்ந்து கொண்ட ஸ்வரூப தாமோதரர், “கவலைப்படாதீர். பேய்களிடமிருந்து விடுபடுவதற்கான வழி எனக்குத் தெரியும்,” என்று கூறி, சில மந்திரங்களை உச்சரித்து, மீனவனின் தலையில் தனது கையை வைத்து மூன்று முறை அவனை அறைந்துவிட்டு, “இப்போது பேய் சென்று விட்டது, பயப்பட வேண்டாம்” என்று உரைத்தார். இவ்வாறு மீனவனை சாந்தப்படுத்திய ஸ்வரூப தாமோதரர் அவரிடம் கூறினார், “நீங்கள் பேய் என்று நினைக்கும் நபர் உண்மையில் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு. இப்பொழுது உங்களது பயம் நீங்கி மனம் அமைதியடைந்துவிட்டது. அவர் எங்குள்ளார் என்று தயவுசெய்து எனக்குக் காட்டுவீராக!” தனது வலைகளை விர...

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யா மஹாபிரபு கடலினுள் குதித்தல்

Image
 ஸ்ரீ கிருஷ்ண சைதன்யா மஹாபிரபு கடலினுள் குதித்தல் ஒருநாள் இரவில் நிலவின் பிம்பத்தை கடலில் கண்ட மஹாபிரபு, அதனை யமுனை என்று தவறாக எண்ணி, ஓடிச் சென்று அதனுள் குதித்தார். பல கிலோமீட்டர் தூரம் வடக்கே மிதந்து சென்று, கோனார்க் என்னும் இடத்தை அடைந்தார். பகவான் சைதன்யரைக் காணவில்லை என்பதை பக்தர்கள் அறிந்தபோது, கடற்கரையில் அவரை அங்குமிங்கும் தேடினர். ஆனால் விடியும் வரை அவரைக் கண்டறிய இயலாததால், அவர் இவ்வுலகை விட்டுச் சென்று விட்டாரோ என்று அச்சப்பட ஆரம்பித்தனர். அதிகாலையில் அவர்கள் கோனார்க் பகுதியை வந்தடைந்தபோது, மிரண்ட தோற்றத்துடன் நரசிம்மதேவரின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்த மீனவனைக் கண்டனர். மஹாபிரபுவைப் பற்றிய சில தகவல்களை அம்மீனவன் அறிந்திருக்கலாம் என்று உணர்ந்ததால், அவன் இவ்வளவு பயந்தபடி காணப்படுவதன் காரணத்தை ஸ்வரூப தாமோதரர் வினவினார்.

மணல்மேட்டினைக் கண்டு ஓடுதல்

Image
                ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மணல்மேட்டினைக் கண்டு ஓடுதல் ஒருநாள் மஹாபிரபு தமது மதிய குளியலுக்காக கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய மணல்மேட்டினைக் கண்டார். அதனை கோவர்தன மலை என்று தவறாக எண்ணி, தெய்வீக பைத்தியக்காரத்தனத்துடன் அதனை நோக்கி ஓடினார். கோவர்தனத்தைப் புகழ்ந்து கோபியர்கள் பாடிய பாடலை உச்சரித்த வண்ணம் அவர் அதனை நோக்கி மின்னலைப் போன்று ஓடினார். அவரது குரல் அடைபட்டது, கண்ணீர் கன்னங்களின் வழியே பெருக்கெடுத்து ஓடியது. காற்றைப் போன்ற வேகத்துடன் சைதன்ய மஹாபிரபு விரைந்து ஓட, அவரது பக்தர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவரது துவாரங்களிலிருந்து இரத்தம் வெளியேறியது, உடல் வெண்ணிறமாக மாறியது. கடல் அலைகளைப் போல நடுங்கியபடி, அவர் நிலத்தில் உணர்வற்று வீழ்ந்தார். பக்தர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கினர். கோவிந்தர் தமது குடுவையிலிருந்த நீரினை மஹாபிரபுவின் உடலில் தெளிக்க, ஸ்வரூப தாமோதரரும் மற்ற பக்தர்களும் “கிருஷ்ண! கிருஷ்ண!” என்று அவரது காதில் பலமாக உச்சரித்தனர். சற்று நேரத்தில் “ஹரி! ஹரி!” என்று முழங்கியபடி கௌரங்கர் குதித்து எழுந்தார். அவர்...

ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்

Image
  ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள் தமது அவதாரத்தின் இறுதி பதினெட்டு வருடங்களில் பகவான் சைதன்யர் புரியை விட்டு எங்கும் செல்லவில்லை. அச்சமயத்தில் கிருஷ்ணரின் பிரிவினால் எழக்கூடிய கசப்பும் இனிப்பும் கலந்த பரவசத்தில் மேன்மேலும் மூழ்கியபடி இருந்தார். பகலில் பல்வேறு செயல்கள் அவரது மனதை ஓரளவிற்கு திசை திருப்பும், ஆனால் இரவில் கிருஷ்ணரின் பிரிவு அவருக்கு சொல்லவியலா பெருந்துன்பத்தைக் கொடுக்கும். அத்துன்பம் கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு மதுராவிற்குச் சென்றதால் ராதாராணி அனுபவித்ததைப் போன்றதாகும். அக்காலக் கட்டத்தில், சில நேரங்களில் பகவான் வெளிப்புற உணர்வை வெளிப்படுத்தி, உலக நடைமுறைக்கு ஏற்ப மக்களிடம் பேசவும் பழகவும் செய்வார்; மற்ற நேரங்களில் பகல் இரவு என்பதைக்கூட அறியாமல் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பற்றி சற்றும் அறியாத அளவிற்கு கிருஷ்ணரின் நினைவில் மூழ்கியிருப்பார்; சில சமயங்களில் இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட உணர்வில் இருந்தார். ஸ்வரூப தாமோதரர், இராமானந்த ராயர், கோவிந்தர் ஆகிய மூவரும் அவரது நிலையான தோழர்கள். இரவில் இராமானந்த ராயர் அல்லது ஸ்வரூப தாமோதரரின் கழுத்தைப் பிடித்தபடி, “ஐயோ! எனதரும...

எந்த தானம் கொடுத்தால் என்ன பயன் பெறலாம்

Image
நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால் அவரவர் சக்தி ஏற்ப தானங்களை செய்ய இயலும். மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது.   பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.  அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.  அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக  குடிகொண்டிருக்கும். - வள்ளலார்.   பல்வேறு பாபங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்யும் மனிதன், ஒரு கட்டத்தில் திருந்தும் போது, அவன் முன்னர் செய்த பாபங்களை அவற்றின் தன்மைக்கேற்ப மன்ன...

கிருஷ்ணரின் ஆனந்தமான ஹோலி விளையாட்டு

Image
விருந்தவனம் / விரஜபூமியில் ஹோலி என்பது மிகவும் வண்ணமயமான ஒரு பண்டிகையாகும். கிருஷ்ணர் இப்பண்டிகையை மிகவும் சந்தோஷமாக கோபர்கள் மற்றும் கோபியர்களுடன் பங்கு கொள்ளுவார்.  ஒரு சமயம் கோபர்கள் ஒன்று சேர்ந்து நந்தபவனத்தை நோக்கி ஹோலி விளையாட ஆரவாரத்துடன் வந்தனர். கோப சகாக்கள் வாயிலில் நின்று கொண்டு "கண்ணா, கண்ணா வெளியில் வா! நாம் எல்லாரும் சேர்ந்து ஹோலி விளையாடலாம், ஏ!! லாலா வெளியில் வா!" என அழைத்தனர்.  இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர்கள் கிருஷ்ணரின் மீது வர்ணம் கலந்த நீரை பீச்சாங்குழலில் ஊற்றி பீச்சி விளையாட ஆவலாக இருந்தார்கள் கிருஷ்ணர் ஆரவாரத்தை கேட்டவுடன் வீட்டிற்க்குள் ஓடி தாய் யசோதையின் மடியில் சென்று ஒளிந்து கொண்டார். அவர் அன்னை யசோதையிடம் 'அம்மா! அம்மா ! எனக்கு வர்ணம் என்றால் ஒரே அச்சம். மேலும் நானோ தனியாக உள்ளேன் சகாக்களோ நிறைய பேர் உள்ளனர். என் மீது மிக அதிகமான வண்ணம் தூவுவர். ஆகவே நான் ஒளிந்து கொள்கிறேன்' . அம்மா நீங்கள் வெளியில் சென்று, நான் வீட்டில் இல்லை என கூறுங்கள் என்றார்.  தாய் யசோதா இனிமையான கிருஷ்ணரின் சொல்லில் மயங்கி, கிருஷ்ணர் வீட்டில் இல்லை என்று கூற ஒ...