கங்கையில் நீராடினால் பாவம் போய்விடுமா?
கங்கையில் நீராடினால் பாவம் போய்விடுமா? கைலாயத்தில் சிவபெருமானும் பார்வதிதேவியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, மக்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களில் எல்லொரது பாவமும் போய்விடுமா? என்பது தான் அந்த கேள்வி. அதற்கு சிவபெருமானோ அதற்கான பதிலை ஒரு சிறு நாடகமாக நடத்தி காட்ட எண்ணி பார்வதி தேவி என்ன செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்படி சிவபெருமான் வயதான ரிஷி போலவும், பார்வதி தேவி ரிஷி பத்தினியாகவும் மாறினார்கள். கங்கையில் தீர்த்தமாடி வரும் வழியில் சிறு பள்ளம் தோன்றச் செய்து சிவபெருமான் அதில் விழ்ந்து தத்தளித்தபடியும், பார்வதி தேவி பள்ளத்தின் அருகே நின்று தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டு கத்தியபடி இருந்தார். கங்கையில் குளித்து விட்டு வந்த பலர் பள்ளத்தில் கிடந்த சிவபெருமானை வெளியே தூக்க வந்தபோது பார்வதி தேவி தனது கணவர் ஒரு உத்தமமான ரிஷி என்றும் அவரை பாவம் செய்தவர் தொட்டால் மறுகணமே சாம்பலாகி விடுவார்கள் என்று கூறி எச்சரிக்கை செய்தார்....